Wednesday, May 31, 2017

சுனாமி வீடியோ உரை-5



பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன ?
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில், புதை படிவ ஆதாரங்கள் மூலம், கடந்த காலத்தில், ஒரே கால கட்டத்தில், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாக பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது.குறிப்பாக அக்ரோ போரா பால்மேட்டா பவளங்களானது இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும் இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு வளரும்.குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.

இந்த நிலையில் கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால் அக்ரோ போரா பாலமேட்ட பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும் இறந்து விடும்.இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டில் ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.

இந்த நிலையில் கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து,உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப் என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.

இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.

எனவே கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.

உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும்.
அனால் உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம்.
பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.

௦௦௦௦௦௦௦௦௦௦

No comments: