Wednesday, May 31, 2017

சுனாமி வீடியோ உரை-3



ஹைத்தி சுனாமிக்குப் புவியியல் வல்லுனர்கள் கூறிய தவறான விளக்கம்.

இதே போன்று, கடந்த 12.1.2010 அன்று ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிக்கும் கூட,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, வட அமெரிக்கக் கண்டமானது,வடஅட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
உண்மையில் வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட அமெரிக்கக் கண்டத்துடன் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் நிலையில், தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி தென் அமெரிக்கக் கண்டத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
குறிப்பாக, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல்தளமானது, தனித் தனியாகப் பிரிக்கப் படாமல், ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது.
அதன் அடிப்படியில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியை,’’வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி’’ என்று,புவியியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டமானது, எப்படி உருவானது? என்ற குழப்பமும் புவியியல் வல்லுனர்களுக்கு வந்து விட்டது.
சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாகக் காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எரிமலைச் செயல் பாட்டால் உருவானதாகவும்,அதன் பிறகு கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,நம்புகின்றனர்.
இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களானது,எதிர்த் திசையில்,தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று அமைந்து இருக்கும்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அந்த இடைவெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,அதன் பிறகு கடலுக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தானது ‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி, கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடலின் மாதிரிப் படி ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு ,கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,பாலம் போன்று தொடர்ச்சியாக இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,உருவாகி இருக்க வில்லை என்றும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு டையில் இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நுழைந்ததால் தற்பொழுது இருக்கும் இடைதுக்கு வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் தற்பொழுது,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,அதாவது ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்னிதோபோட் என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகளை, கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர்.
தற்பொழுது வாசிங்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த டைனோசரின் எலும்பை, ஆய்வு செய்த.யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரான, ஜோன் ஆஸ்ட்ரம். அந்த எலும்பானது, ஆர்னிதோபோட்,என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்பு என்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.
இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் உள்ள ஆர்கனாஸ் மலையின் மேற்குப் பகுதியில்,கிரேட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தைச் சேர்ந்த,அதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,தாவர உண்ணி டைனோசரின் எலும்புகளை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர்.இதன் மூலம்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாக கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்கள் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில், வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டாமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்றும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கருத்தானது ,’அட்லாண்டிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.
ஆனால், பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டம் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை.
எனவே, குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் எங்கே உருவானது? என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால் கூற இயலவில்லை.
எனவே, கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய .எரிமலைப் பிளம்புகளானது,காலப் போக்கில்,மறைந்து விட்டிருக்கலாம் என்று, கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனாலும்,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது எப்படி உருவானது? என்று,’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால், விளக்கம் கூற இயல வில்லை.
இந்த நிலையில், இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, உருவாகி இருக்கலாம் என்றும், ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர்.
ஆக மொத்தம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும்,புவியியல் வல்லுனர்களுக்கு,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது, எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிய வில்லை.
இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகள் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக, கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,நம்புகிறார்கள்,ஆனால் கரீபியன் பாறைத் தட்டானது எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, USGS மைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாதாதால்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால்,உண்மையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே , USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது, என்பதே உண்மை.
அந்த உண்மையை மறைப்பதற்காகவே, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதே உண்மை.
இதன் மூலம், ஹைத்தி தீவில், ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்ன காரணம் என்பது, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
உண்மையில், கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பது,. கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியானது, தொடர்ச்சியாக இருப்பதன் மூலம்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில், பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

இவ்வாறு, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்தான், கண்டங்களானது,கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள்,அடிப்படை ஆதாரமற்ற ஒரு கற்பனைக் கருத்தை நம்பிக் கொண்டு இருப்பதால்தான்,புவியியல் வல்லுனர்களால்,நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிகளுக்கும்,சரியான விளக்கத்தைக் கூற முடிய வில்லை.
இதே போன்று,கண்டத் தட்டு நகர்சிக் கருத்தை நம்பிக் கொண்டு இருக்கும் ஆராய்ச்சியாளர்களால்,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் சரியான விளக்கத்தைக் கூற முடிய வில்லை.

No comments: