Wednesday, May 31, 2017

சுனாமி வீடியோ உரை-1



அறிமுக உரை 
வணக்கம் நான் விஞ்ஞானி க.பொன்முடி,நான் கடந்த பதினைந்து ஆண்டு காலமாக, நில அதிர்ச்சி சுனாமி ஏன் ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
எனது ஆராய்ச்சியில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
ஆனால் தற்பொழுது நில அதிர்சிகள் குறித்தும் சுனாமிகள் குறித்தும் தவறான கருத்து நிலவுகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்,கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது,அந்தப் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு,திடீரென்று நழுவிச் செல்லும் பொழுது,சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது எப்படி தெரிய வந்தது என்பது குறித்து நான் சற்று விரிவாக விளக்குகிறேன்.

இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகின என்பது எப்படி தெரிய வந்தது என்பதைப் பற்றி விளக்குகிறேன்.
குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் சில எரிமலைகள் இருக்கின்றன.
அந்த எரிமலைகள் எல்லாம் அணைந்து போன எரிமலைகள் என்றே நீண்ட காலமாக நம்பப் பட்டது.
இந்த நிலையில்அந்த எரிமலைகள் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோள்கள் மூலம் அந்த எரிமலைகளின் இயக்கம் கண்காணிக்கப் பட்டது.
குறிப்பாக அந்த செயற்கைக் கோள்களில் இருந்து தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் வீசப் பட்டது.
அதன் பிறகு,அந்த ரேடியோ கதிர்களானது ,தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்த பொழுது,கருவிகள் மூலம், தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.

அந்தப் படங்களை ஒன்றாக இணைத்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
ஏன் இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றி ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகின என்பதற்கு,எரிமலை இயல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தையும் தெரிவித்தனர்.
அதாவது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் உயர்கிறது.
அப்பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,சில சென்டி மீட்டர் உயர்கிறது.
அதன் பிறகு,அந்த எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் தாழ்வடைகிறது.
இதனால் அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் இறங்குகிறது.
இவ்வாறு ,எரிமலைகள் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்கும் பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன ,என்று எரிமலை இயல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்தனர்.

இதே போன்று,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவான இடங்களிலும்,குறிப்பாக , சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
குறிப்பாக,இத்தாலி நாட்டில்,லா அகுலா நகரில், கடந்த 2009 ஆம் ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்பொழுது,அந்த நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,, பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
அத்துடன்,அந்தப் பகுதியில்,நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு,ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும்,கதிரியக்கத் தன்மை உடைய வாயு ,கசிந்து இருப்பதையும்,ஜியூவாணி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்தார்.இதே போன்று,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்த இடங்களில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கின்றன.
அதன் அடிப்படையில்,ஜியோவானி ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்படப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
அவர் எச்சரித்ததைப் போன்றே ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
முக்கியமாக,ரேடான் வாயுவானது, எரிமலைகளில் இருந்து வெளிப் படும் வாயு ஆகும்.
எனவே,பூமிக்கு அடியில் எரிமலை வெடித்தால் லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக தெரிய வந்தது.

இதே போன்று ,கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,ஜப்பானில் உள்ள ஹோன்சு தீவுப் பகுதியில்,ஏற்பட்ட ,நில அதிர்ச்சியால்,சுனாமி உருவானது.
அப்பொழுது,ஹோன்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் , பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
அத்துடன்,அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ,ஹோன்சு தீவுக்கு மேலே வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது,வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இது குறித்து விளக்கமளித்த,நாசாவைச் சேர்ந்த,டாக்டர்,டிமிட்ரி ஒசனோவ்,அந்தப் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து,ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும்,ரேடான் வாயு கதிரியக்கத் தன்மை உடையதால்,அந்த வாயுவானது காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும்,இதனால் எலக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது, ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால்,வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருக்கலாம் என்று, ,டாக்டர் டிமிட்ரி ஒசனோவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள வெடித்ததாலேயே,ஹோன்சு தீவில் நில அதிர்ச்சிகளும்,சுனாமியும் உருவாகி இருப்பது, ஆதரப் பூர்வமாக உறுதிப் படுத்தப் படுகிறது.

முக்கியமாக,தெற்காசிய சுனாமியானது,இந்தியா இலங்கை போன்ற நாடுகளை தாக்கப் போவதை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிந்து இருக்க முடியும்,
எப்படியென்றால்,சுமத்ரா தீவின் வட மேற்குப் பகுதியில் உருவான சுனாமியானது, இந்தோனேசியாவைப் பத்தே நிமிடங்களில் தாக்கியது.
அதன் பிறகு,அந்த சுனாமி அலைகளானது,சுமத்ரா தீவின் வட மேற்குப் பகுதியில்,இருந்து நூற்றி இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவை,அரை மணி நேரத்தில் தாக்கியது.
அதன் பிறகு,அந்த சுனாமி அலைகளானது இந்தியப் பெருங் கடலில் பயணம் செய்து,ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, ,இந்தியா,இலங்கை, மியன்மார்,பங்களா தேஷ்,தாய்லாந்து ,மலேசியா ஆகிய நாடுகளைத் தாக்கியது.
இவ்வாறு சுமத்ரா தீவுப் பகுதியில் உருவான சுனாமியானது,அரை மணி நேரத்தில்,கிரேட் நிகோபார் தீவைத் தாக்கிய பிறகு,ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு,இந்தியப் பெருங் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் மற்ற நாடுகளைத் தாக்குவது முதல் முறையல்ல,
இதே போன்று,கடந்த,நூற்றி முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு,குறிப்பாகக் கடந்த,1883 ஆம் ஆண்டு,ஆகஸ்ட் மாதம்,இருபத்தி ஏழாம் நாள்,சுமாத்ரா தீவின் தென் பகுதியில் உருவான சுனாமி அலைகளானது அரை மணி நேரத்தில்,கிரேட் நிகோபார் தீவைத் தாக்கிய பிறகு,ஒன்றரை மணி நேரத்தில் ,இந்தியப் பெருங் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் மற்ற நாடுகளைத் தாக்கியது.
எனவே,இதே போன்ற நிகழ்வு எதிர்காலத்திலும் நடை பெறுவதற்கு சாத்தியம் இருக்கிறது.
எனவே,கிரேட் நிகோபார் தீவின் கடற் கரையில்,கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்திக் கண்காணிப்பதன் மூலம்,இந்தியப் பெருங் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும்,நாடுகளைத் தாக்க வரும் சுனாமி அலைகளை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அறிந்து கொள்ள முடியும்,
அதன் அடிப்படையில்,இந்தியப் பெருங் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் நாடுகளைத் தாக்க வரும் சுனாமி அலைகள் குறித்து, ஒரு மணி நேரம் முன்னதாகவே எச்சரிக்கை செய்து அந்த நாடுகளின் கடற்கரையோரம் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரச் செய்து,அவர்களைச் சுனாமி ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
இதே முறையில்,பிலிபைன்ஸ் மற்றும் சாலமன் தீவுக் கூட்டத்தில் அமைந்து இருக்கும் தீவுகளில்,ஒரு தீவைச் சுனாமி தாக்குவதைக் கண்காணிப்புக் காமிராக்கள் மூலம் அறிந்து மற்ற தீவுகளுக்கு சுனாமி முன் அறிவிப்பை செய்து மக்களைக் காப்பாற்ற முடியும்.

No comments: