Wednesday, May 31, 2017

சுனாமி வீடியோ உரை-4



ஆர்க்டிக் டைனோசர்கள் ஒரு புதிர் 

அறுபத்தி ஆறரை டிகிரி வடக்கு அட்ச ரேகைப் பகுதிக்குள் இருக்கும்,வட அமெரிக்கக் கண்டத்தின்,வட பகுதியான,அலாஸ்காவின் வட பகுதியான,நார்த் ஸ்லோப் என்று அழைக்கப் படும் பகுதியிலும்,அதே போன்று,ஆசியக் கண்டத்தின்,வட பகுதியான,சைபீரியாவின் வட பகுதியில் இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியிலும்,பதின் மூன்று இன வகையைச் சேர்ந்த,தாவர மற்றும் ஊண் உண்ணி இனவகையைச் சேர்ந்த, டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள்,இளவயது டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள், கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து,டைனோசர்களின் வாழ்க்கை முறை குறித்து,ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஏனென்றால்,தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் ,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான ஆர்க்டிக் பகுதியில், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகள் எல்லாம்,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததே காரணம் என்றும்,அதன் பிறகு,அந்த நிலப் பகுதிகலானது,மெதுவாக நகர்ந்து,ஆர்க்டிக் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று நம்புகின்றனர்.

குறிப்பாக, டைனோசர்கள் ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும்.

ஊர்வன வகை விலங்கினங்களால்,மற்ற பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று,சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.

அதன் காரணமாகவே,பாம்பு,முதலை,ஆமை போன்ற ஊர்வன வகைப் பிராநிகலானது,பனிப் பிரதேசத்தைத் தவிர்த்து,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதிகளிலேயே காணப் படுகிறது.

எனவே,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில்,ஒரு வேளை டைனோசர்கள்,பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணிகளாக இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

குறிப்பாக, பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,ஆண்டுக்கு நான்கு மாதங்கள் ,ஆர்க்டிக் பகுதியில்,தொடர்ந்து பகலும்,அதே போன்று ,ஆண்டுக்கு நான்கு மாதங்கள்,தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இது போன்று தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால்,தாவர வகைகளால்,சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே,ஆர்க்டிக் பகுதியில்,அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.

ஆனால், டைனோசர்கள் யானையை விட நான்கு மடங்கு தாவரங்களை உண்ணக் கூடியது,அதே போன்று டைனோசர்களும்,யானைகளைப் போலவே,கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.

எனவே,ஏழு கோடி ஆண்டுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியில், டைனோசர்கள் கூட்டம்,எதைத் தின்று உயிர் வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தக் கேள்விக்கு, சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,இறந்த தாவரங்களின் பாகங்களை உண்டு உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்புகின்றனர்.

ஆனால், ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால்,அதற்கு முப்பது முதல்,முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.

ஆனால்,தற்பொழுது, ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து டிகிரியாக இருக்கிறது.

இந்த நிலையில்,ஆராய்ச்சியாளர்கள்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆர்க்டிக் பகுதியில்,மூன்று டிகிரியாக இருந்திருக்கிறது, என்று கணித்து இருக்கின்றனர்.

எனவே, ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன?என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது,பனிக் காலத்தில்,தென் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம்,என்று கருதினார்கள்.

இவ்வாறு, குறைந்த அட்ச ரேகைப் பகுதியில்,முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்த பிறகு,மறுபடியும்,உயர்ந்த அட்ச ரேகைப் பகுதிக்கு,இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள்.

இந்த நிலையில்,தற்பொழுது,டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.குறிப்பாக,டைனோசர்களின் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என்பது குறித்து ஆரியப் படாமல் இருந்தது.

இந்த நிலையில்,அமெரிக்காவின்,புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கிரிகோரி எரிக்சன் மேற்கொண்ட ஆய்வில்,டைனோசர்களின் முட்டைகளானது ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகளைப் போலவே,பொரிவதற்கு, மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு,டைனோசர்களின் புதை படிவங்கள் ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,டைனோசர்களானது,பறவைகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணியாக இருந்திருக்கலாம் என்றும்,பறவைகளைப் போலவே,டைனோசர்களின் முட்டைகளும்,பதினோரு நாட்கள் முதல்,எண்பத்தி ஐந்து நாட்களில் பொரிந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.

இந்த நிலையில்,எரிக்சன், ,டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்குள் இருந்த,டைனோசர்களின் கருக்களின் பற்கள் மற்றும் எலும்புகளில் இருந்த வளர்ச்சி வளையங்களைக் கணக்கிட்டதன் அடிப்படையில்,அந்தக் கருக்களானது எத்தனை மாதக் கரு என்பதை அறிந்திருக்கிறார்.

அதன் அடிப்படையில்,அவர்,சிறிய வகை டைனோசர்களின் முட்டைகள் மூன்று மாத அளவிலும்,பெரிய வகை டைனோசர்களின் முட்டைகளானது, ஆறு மாத கால அளவிலும் பொரிந்து இருக்கின்றன, என்று தெரிவித்து இருக்கின்றார். 
குறிப்பாக சிறிய வகை டைனோசர்கள் கூட பருவ வயதை அடைய ஓராண்டு காலம் ஆகும் என்பதால் பெரிய வகை டைனோசர்கள்,பெரிதாக இன்னும் அதிக காலம் ஆகும்.
எனவே,டைனோசர்களானது,தங்களின் முட்டைகளை இட்ட பிறகு,அந்த முட்டைகளானது பொரியும் காலம் வரை, அதாவது ஆறு மாதகாலம்,அதன் முட்டைகளை,மற்ற விலங்கினங்களிடம் இருந்து பாது காக்க வேண்டும்.

அதன் பிறகும்,அதன் குஞ்சுகள் பெரிதாக இன்னும் ஓராண்டு காலம் ஆகும்.
எனவே சில ஆராய்ச்சியாளர்கள் நம்பியதைப் போன்று,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதிக்கும்,குறைந்த அட்ச ரேகைப் பகுதிக்கும்,கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர்.

இதன் அடிப்படையில்,டைனோசர்கள் ஆர்க்டிக் பகுதியிலேயே ஆண்டு முழுவதும் குடியிருந்து குடும்பமும் நடத்தி இருக்கிறது என்ற முடிவுக்கும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர்.

எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படிப் பொரிந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மாயோ சாரஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் முட்டைகளானது,பறவைகளின் கூட்டில் இருப்பதைப் போன்று,வரிசையாக அடுக்கப் பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,அந்த டைனோசர்,பறவைகளைப் போன்று அடை காத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள டைனோசர்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.

அது போன்ற டைனோசர்கள் முட்டைகளை ஆடை காக்கும் சாத்தியம் இல்லை.

எனவே,டைனோசர்களின் முட்டைகள் ஆர்க்டிக் பகுதியில்,பொரிந்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஆர்க்டிக் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும்.
எனவே,டைனோசர்களின் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில்,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருப்பதைப் போன்றே அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.

எனவே, பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகளானது.அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததாகவும்,அதன் பிறகு,பனிப் பிரதேசங்களுக்கு நகர்ந்து வந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.

அதே போன்று, பனிப் பிரதேசத்தில் இருந்து டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கம் தவறு.

உண்மையில்,பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்வாழ்ந்த காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்ததே காரணம் என்பது ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

No comments: