Tuesday, December 9, 2014

Tsunami story out line

சுனாமியின் மறுபக்கம்
சான்றாவஆவணங்களின் அடிப்படையில் ஒரு சரித்திரக் கண்டு பிடிப்பு.
]தற்பொழுது நில அதிர்ச்சி மற்றும் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்குப் புவியியலாளர்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதால்,நில அதிர்ச்சிகளையும் சுனாமிகளையும் முன் கூட்டியே அறிய இயலாத நிலை உள்ளது.
இதனால் ஏராளமான உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுகின்றன.
தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து தனித் தனியாகப் பாளங்களாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சி ஏற்படுவதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
அதே போன்று ஒரு கண்டத்துக்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல்தளப் பகுதியானது உரசிய படி திடீரென்று நகர்ந்து செல்வதால்,கடல் நீர் உந்தப் பட்டு சுனாமி அலைகள் உருவாகுவதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
ஆனால் புவியியலாளர்கள் நம்பிக்கையானது அடிப்படை ஆதாரம்\ற்ற கருத்து என்பது சன்றாவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் பூமியின் வட துருவப் பகுதியில் இருந்து தென் துருவப் பகுதி வரைப் பலாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு,ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.
மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் என்று அழைக்கப் படும் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து சூடான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாக உருவாகுவாதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்குப் பாறைக் குழம்பு வரும் பொழுது,ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழையக் கடல் தளப் பாறைகளை,கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்த்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.





இதே போன்று தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.
குறிப்பாக அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் வட பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் நம்பப் படும் கடல் தளத்துடன்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,அதே போன்று அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் வட பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் நம்பப் படும் ,கடல் தளத்துடன்,ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களை உள்ளடக்கிய யூரேசியக் கண்டமானது ,கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் தென் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்,தென் அமெரிக்கக் கண்டமானது,வட மேற்கு திசையை நோக்கியும்,அதே போன்று அந்தக் கடலடி எரிமலைத் தோரின் தென் பகுதியில் உருவாகி,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்,ஆப்பிரிக்கக் கண்டமானது வட அகிலக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் கண்டத் தட்டுகளாக நகரும் பொழுது அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாக நம்பப் படுகிறது.
ஆனால்,கடந்த 1963  ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214  நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,அமெரிக்காவின் முன்னணி அறிவியல் ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டத்துக்கும், அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியானது,தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல் ஒரே தொடர்ச்சியாக இருப்பதும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது,நிரூபணமாகிறது.
இந்த நிலையில் கடந்த 12.01.2010  அன்று,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில்,கடுமையான நில அதிர்ச்சியும்,சிறிய அளவிலான நில அதிர்ச்சியும் ஏற்பட்டதில்,இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
ஆனால் அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்பதற்கு USGS என்று அழைக்கப் படும் ,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியலாளர்களால் இன்று வரை சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.
குறிப்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததால்,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

ஆனால் உண்மையில் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்கள் தெரிவிக்க வில்லை.
ஏனென்றால் உண்மையில் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்களுக்குத் தெரிய வில்லை.
குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எப்படி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது/எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியி யலாளர்களுக்குத் தெரிய வில்லை.



சில புவியியலாளர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,கடல் தளத்துக்கு இருந்த ஒரு எரிமலைப் பிளம்பால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதால்,பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகிய பிறகு,தனியான பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்த, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்து ,தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும்,கரீபியன் தீவுக் கூட்டமானது ,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பினார்கள்.
தற்பொழுது வட அமெரிக்காக் கண்டத்திற்கும் தென் அமெரிக்காக் கண்டத்திற்கும் இடையில் பாலம் போன்று,மத்திய அமெரிக்க நிலப் பகுதி அமைந்து இருக்கிறது.
ஆனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து அமெரிக்கக் கண்டங்களை இணைத்ததகவும்,அதனால இந்த இரண்டு கண்டங்களுக்கும் விலங்கினங்களின் இடப் பெயர்வு நடை பெற்றதாகவும்,அந்த நிகழ்வானது ‘’தி கிரேட் அமெரிக்கன் இண்டர் சேஞ்ச்’’ என்றும் அழைக்கப் படுகிறது.
ஆனால் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் மத்திய அமெரிக்க நிலப் பகுதி புதை படிவங்கள்
கரீபியன் தீவுகள் அதே இடத்திலேயே இருக்கிறது.புதை படிவ ஆதாரங்கள்.

ஆனால் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த டி டெலிவோர்யாஸ் மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷ்யாம் ஸ்ரீ வத்ஸ்சவா ஆகியோர் ஹோண்டுராஸ் நாட்டின் மத்தியப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொண்மையான தாவரங்களின் புதை படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று 1985  ஆம் ஆண்டு ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல் வல்லுனர்கள் ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ஸ்டெபானோ செரஸ் என்று அழைக்கப் படும் அமோனிட்டிஸ் வகை கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.

கியூபாவில் டைனோசர் புதை படிவங்கள் 
பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி இடுப்பு வகை  டைனோசரின் முதுகெலும்பின் புதை படிவங்களை கியூபா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள சியரா டி ஆர்காநோஸ் மலைப் பகுதியில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது.
கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட அகழ்வாய்வில் இந்தப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர்கள் வாழ்ந்திருப்பது உறுதி செய்யப் பட்டள்ளது.
இதன் மூலம் கியூபா மற்றும் ஹைத்தி தீவுகள் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது கடந்த பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுடன் நிலத் தொடர்பு கொண்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே தற்பொழுது வேறு சில புவியியலாளர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமனது,அட்லாண்டிக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்து ஒரு எரிமலைப் பிளம்பால் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்றும் ஒரு கருத்தை முன் மொழிந்திருக்கின்றனர்.
இன்னும் சில புவியியலாளர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன் மொழிந்திருக்கின்றனர்.
ஆனாலும் யாராலும் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க்ரியது என்று உறுதியாகக் கூற இயலவில்லை.
எனவேதான் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்ட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறினால்,பின்னர் அது தொடாபாக எழும் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே,கரீபியன் தீவுக் கூட்டமானது உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பத்து பற்றி எதுவும் குறிப்பிடாமல்,கரீபியன் தீவுக் கூட்டமானது ,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கரீபியன் தீவுக் கூட்டமானது ,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஒரு விளக்கத்தை,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
உண்மையில் அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்களுக்கு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லை.


இந்த நிலையில் united states of giological society (usgs ) என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் புவியியல் கழகம், கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாகக்  கூறப் படும் ஒரு வரை படத்தை வெளியிட்டது.
அந்த வரை படத்தில், வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையில், கற்பனையாக ஒரு கோட்டை வரைந்து, அந்த இரண்டு கண்டங்களும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியானது, தனித் தனிப் பகுதிகளாக இருப்பது போன்று தவறாகச் சித்தரித்துக் காட்டப் பட்டுள்ளது.
அதாவது அமெரிக்கக் கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக உள்ள அட்லாண்டிக் கடல் தளமானது, இரண்டு பகுதிகளாக இருப்பது போன்று தவறாகச் சித்தரித்துக் காட்டப் பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது.


கடந்த 12.01.2010  அன்று, ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.

எரிமலைகளைச் சுற்றி உருவாகும் வளைய வடிவிலான வரப்புகள்  போன்ற மேடு பள்ள வளையங்கள்
மியாமி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், தரை மட்ட மாறுபாடுகளை, ரேடியோ கதிர் வீச்சு முறையில் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.
இவ்வாறு எரிமலையைச் சுற்றியுள்ள தரையில் வளைய வடிவில் மேடு பள்ளங்கள் உருவாகுவதற்கு, அந்த எரிமலையானது உயர்ந்து இறங்குவதே காரணம், என்று டாக்டர் ஜூலியட் பிக் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக ஒரு எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு திரண்டு அந்த எரிமலை உயரும் பொழுது, எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் எரிமலையுடன் சில சென்டி மீட்டர் உயர்கிறது.
இந்த நிலயில், அந்த எரிமலையில் இருந்து வாயுக்களும் நீராவியும் வெளியேறுவதால் எரிமலையின் உயரம் மறுபடியும் இறங்குகிறது.
அதனால் எரிமலையுடன் வட்ட வடிவில் உயர்ந்த தரைப் பகுதியானது, மறுபடியும் தாழ்வடைகிறது.
இவ்வாறு எரிமலையுடன், எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்  சில செண்ட்டி மீட்டர் ,உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக வடுக்கள் போன்ற மேடு பள்ள வளையங்கள் பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகின்றன.
இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றியும், வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பசிபிக் பெருங் கடலின் வட பகுதியில் சங்கிலி போன்று வளைவான பாதையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகள் அலூசியன் தீவுகள் என்று அழைக்கப் படுகின்றன.
அந்த எரிமலைத் தீவு வரிசையில் உள்ள பெலிக் என்ற எரிமலையானது, 1814 மற்றும் 1852 ஆம் ஆண்டுகளில் சீறிய பிறகு அமைதியாகி விட்டது.
அந்த எரிமலையின் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோளில் இருந்து ரேடியோக் கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டது.அவ்வாறு தரையை நோக்கி அனுப்பப் பட்ட ரேடியோ கதிர்கள் பெலிக் எரிமலையின் மீதும் சுற்று வட்ட தரைப் பகுதியில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டுத் திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில் இருந்த நுட்பமான கருவிகள் மூலம், பெலிக் எரிமலையைச் சுற்றியிருந்த தரைப் பகுதியின் மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.
இதே போன்று பல முறை பெலிக் எரிமலையின் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம், ரேடியோக் கதிர் வீச்சு முறையில் பெலிக் எரிமலையின் தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் பட்டது.
பின்னர் அந்தப் படங்கள், கணிப் பொறி மூலம் ஒரே படமாக மாற்றப் பட்டது.
அந்தப் படத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1997  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில், பெலிக் எரிமலையைச் சுற்றி முப்பது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, ஆறு அங்குல உயரத்துடன், ஆறு வளையங்கள் உருவாகி இருப்பது பதிவாகி இருந்தது.
இவ்வாறு பெலிக் எரிமலையை சுற்றி வரப்பு போன்று ஆறு வளையங்கள் உருவாகி இருந்ததற்கு ,பெலிக் எரிமலைக்கு அடியில் ஆறு கிலோ மீட்டர் ஆழத்தில், புதிதாக ஐந்து கோடி கன சதுர மீட்டர் அளவிற்கு பாறைக் குழம்பு சேர்ந்ததே காரணம், என்று எரிமலை இயல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

.


புவித் தரைக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

அதே போன்று ,நில அதிர்ச்சியும் சுனாமிகளும் ஏற்பட்ட இடங்களில், எரிமலைகளில் இருந்து வெளி வரும் ரேடான் வாயுக்கள் கசிந்து இருப்பதன் மூலமாகவும், புவித் தரைக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

வட அமெரிக்கக் கண்டத்தில், ஆரிகன் மாகாணத்தில் மூண்று சகோதரிகள் என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைகள் அமைந்து இருக்கும் பகுதியில், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்களை ஆய்வு செய்த பொழுது, ஒரு இடத்தில் அறுநூறு கிலோ மீட்டர் சுற்றளவுக்குத் தரைப் பகுதியானது சில அங்குலம் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.

ஆரிகன் புடைப்பு என்று அழைக்கப் படும் அந்த வட்ட வடிவ மேட்டுப் பகுதியின் மத்தியப் பகுதியில், நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

அந்த இடத்தை ஆய்வு செய்த புவியியல் வல்லுனர்கள், அந்த புடைப்புக்குக் கீழே, ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவுக்கு பாறைக் குழம்பு திரண்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

அத்துடன் அந்தப் புடைப்புப் பகுதிக்கு அடியில், புதிதாக ஒரு எரிமலை உருவாகிக் கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் எவ்வாறு எடுக்கப் பட்டது.

மூன்று சகோதரிகள் என்று அழைக்க படும்  அந்த எரிமலையின் மேல் செயற்கைக் கோள் பறந்து செல்லும் பொழுது, செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டன.
அந்த ரேடியோக் கதிர்கள், தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டுத் , திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில் இருந்த நுட்பமான கருவிகள் மூலம், தரையின் ஏற்றத் தாழ்வுகள் நீலம்,சிவப்பு,மஞ்சள் போன்ற வண்ணங்களில் பதிவு செய்யப் பட்டது.
இதே போன்று மறுபடியும், அதே எரிமலைப் பகுதியின் மேல் செயற்கைக் கோள் பறந்து சென்ற பொழுதும், ரேடியோ கதிர்கள் மூலம் தரையின் மேடுபள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.
இவ்வாறு ஒரு எரிமலைப் பகுதியின் மேல், வெவ்வேறு காலத்தில் பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம், பதிவு செய்யப் பட்ட தரை மட்ட மேடு பள்ளப் பதிவுகளக் கணினி உதவியுடன், ஒரே படமாகத் தொகுக்கப் படும் பொழுது, இடைப் பட்ட காலத்தில், அந்த எரிமலைப் பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான மாற்றம் கூட பதிவாகிறது.
உதாரணமாக இந்த முறையில் ஒரு வயல் வெளியை உழுதிருந்தால் கூட, கண்டு பிடித்து விட முடியும்.
இதே முறையில் ஆரிகன் மாகாணத்தில் உள்ள எரிமலைப் பகுதியின் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்து பார்த்த பொழுது, அந்தப் பகுதியில் அறுநூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையானது பத்து சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கடந்த 2004  ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்தவட்ட வடிவ மேட்டுப் பகுதியின் மத்தியில் இருந்த புடைப்பு போன்ற பகுதியில்   முன்னூற்றி ஐம்பதுக்கும் அதிகமான முறை சிறிய அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.
இத்தாலி நில அதிர்ச்சியும் ரேடான் வாயுக் கசிவும்.
இதே போன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களிலும்,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றியும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, எரிமலையைச் சுற்றி உருவாகுவதைப் போன்றே ,வரப்புகள் வெட்டியதைப் போன்ற  மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
உதாரணமாகக் கடந்த 2009  ஆண்டு இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, லா அகுய்லா என்ற நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்பொழுது  நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போலவே, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும், கதிர் வீச்சுத் தன்மை உடைய வாயு வெளிப் பட்டு இருந்ததை, நில அதிர்ச்சி ஏற்படுவதை முன் கூட்டியே கணிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட, ஜியுலியாணி ஜியாம்ப்பாவ்லோ என்ற தொழில் நுட்ப வல்லுநர், கண்டு பிடித்தார்.
முக்கியமாக ரேடான் வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப்படும், நிறமற்ற மணமற்ற கதிரியக்கத் தன்மை உடைய வாயுவாகும்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே, இத்தாலி நாட்டில் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 11.03.2011  அன்று ஜப்பானின் ஹோண்சு தீவுக்கு அருகில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி ஏற்பட்டது.
அப்பொழுது ஹோண்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது ,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, நில அதிர்ச்சி மையப் பகுதிக்கு மேலே, வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது, அசாதாரணாமாக உயர்ந்து இருந்ததும் வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இவ்வாறு வளி மண்டலத்தில் அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்ததற்கு, அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கசிந்த கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக இருக்கலாம் என்று நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த டிமிட்டார் ஒவ்சொனவ் என்ற புவியியல் வல்லுநர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக ரேடான் வாயுவின் கதிர் வீச்சின் காரணமாக காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் பட்டதால், அந்த எலெக்ட்ரான்கள் திரண்டு எலெக்ட்ரான் மேகம் உருவாகி இருக்கலாம் என்றும், இதனால் உருவான அயனிகள் நீரை ஈர்க்கும் தன்மை உடையது என்றும், இந்த வினையானது ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால், வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம் என்றும், டாக்டர் டிமிட்டார் ஒவ்சொனவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு, ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது, மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதும், செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில்,இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து சென்றதால்தான்,சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக 10.03.2005  அன்று நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து வித்து விட்டுப்  பிறகு,மூன்று மாதம் கழித்து அதே நாசா அமைப்பு, 27.04.2005  அன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று நாசாவின் புவியியலாளர்கள் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு கருத்துக்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.



நாசாவுக்கு ஏன் குழப்பம் வந்தது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து, அருகருகே இருந்ததாகவும், அதன் பிறகு அங்கிருந்து, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும், ஐயாயிரம் கிலோமீட்டர் இடை வெளியில் அமைந்து இருக்கிறது.
குறிப்பாகக் கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும், கடல் தளதுடன் ,தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருக்கின்றன, என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அருகருகே இருந்த கண்டங்கள், தற்பொழுது இருப்பதைப் போன்று ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு விலகி இருந்தால், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இரண்டு தனித் தனிக் கடல் தளத்தின் மேல் இருந்தால்தான் சாத்தியம்.
அத்துடன் கண்டத் தட்டுகள் நகரும் பொழுது, கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.




எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், புவியியல் வல்லுனர்கள் நம்புவதைப் போன்று, தனித் தனிக் கண்டத் தட்டுகளாக, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் உரசல் ஏற்பட்டு, பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்குத் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட,  3,58,214   நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றையும், நாசா அமைப்பினர் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பது,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், தனித் தனிக் கடல் தளத்துடன், கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு, அடிப்படை ஆதாரம் இல்லை.
கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.
இந்த நிலையில் கண்டத் தட்டுகளின் எல்லையைக் குறிப்பதாகக் கூறப் படும், ஒரு வரை படத்தையும், நாசா அமைப்பினர் வெளியிட்டனர்.
அந்தக் ‘கண்டங்களின் எல்லை’ வரை படத்திலும் கூட , இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும், தனித் தனிப் பகுதிகளாகப் பிரித்துக் காட்டாமல், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், முழுமை இல்லாத சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து, கோடிட்ட பகுதியில் என்ன நடக்கிறது? என்று உறுதியாகத் தெரியவில்லை! என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரு கண்டத் தட்டாக இருக்கிறதா? அல்லது இரண்டு தனித் தனிக் கண்டத் தட்டாக இருக்கிறதா? என்றே உறுதியாகத் தெரியாத நிலையில்தான், நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள், இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என 10.03.2005  அன்று ஒரு விளக்கத்தை முதலில் கூறி விட்டு, பிறகு மூன்று மாதம் கழித்து, 27.04.2005  அன்று வெளியிட்ட அறிக்கையில், ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று, முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களை, அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றி,வெறும் யூகத்தின் அடிப்படையில் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று சப்பாணி சுனாமிக்கும் புவியியலாளர்கள் அடிப்படை ஆதாரமின்றி வெவ்வேறு விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.

பசிபிக் கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கிறதா?


அட்லாண்டிக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிய கடல் தளமானது, தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக ஹாரி ஹெஸ் என்ற புவியியல் வல்லுநர் ஒரு கருத்தை முன்மொழிந்தார்.
அப்படியென்றால் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறதா?என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் அறியப் படவில்லை.
எனவே அட்லாண்டிக் கடல் பகுதியில், புதிதாக கடல் தளம் உருவாகி எதிர்ரெதிர் திசைகளை நோக்கி விலகி,நகர்ந்து கொண்டு இருப்பதை ஈடு செய்யும் அளவுக்கு, பூமியில் வேறு பகுதிகளில் கடல் தளமானது, மறுபடியும் பூமிக்குள் சென்று அழிந்து கொண்டு இருக்க வேண்டும், என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில் பசிபிக் கடல் தரையின் மேல், ஹவாய் எரிமலைத் தீவுகள், தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி தொடர்ச்சியாக உருவாகி இருப்பது, கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜான் டூசோ வில்சன் என்ற புவி இயற்பியலாளரின் கவனத்தைக் கவர்ந்தது.


இவ்வாறு பசிபிக் கடல் தரையின் மேல், ஹவாய் எரிமலைத் தொடரானது, தென் கிழக்குத் திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி தொடர்ச்சியாக உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடல் தளமானது தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தைத் தொடர்ச்சியாகத் துளைத்துக் கொண்டு இருப்பதே காரணம், என்று டாக்டர் ஜான் டூசோ வில்சன்,ஒரு விளக்கத்தை முன் வைத்தார்.
உதாரணமாக ஒரு வெல்டிங் ராடின் மேல், மெலிதான உலோகத் தகட்டை நகர்ந்தும் பொழுது, தகட்டின் மேல் வரிசையாகத் தழும்புகள் ஏற்படுவதைப் போன்று, பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், பசிபிக் கடல் தளத்தின் மேல், வரிசையாக ஹவாய் எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது, என்று டூசோ வில்சன் விளக்கம் கூறினார்.

பசிபிக் கடல் தரை நிலையாக இருக்கிறது.

ஜான் டூசோ வில்சனின் விளக்கம் உண்மை என்றால், அதே பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும், மற்ற எரிமலைத் தொடர்களும், ஹவாய் எரிமலைத் தொடருக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.
ஆனால் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும்,ஹவாய் எரிமலைத் தொடருக்கு இணையாக உருவாகாமல், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கிறது.
குறிப்பாக ஹவாய் எரிமலைத் தொடரானது, தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி, சற்று விரிந்த நிலையில் இருக்கும் ‘’ ட ‘’ எழுத்து போன்று உருவாகி இருக்கிறது.
ஆனால் லைன் எரிமலைத் தொடரானது ஹவாய் எரிமலைத் தீவுத் தொடரை விட அதிகமாக தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.
இவ்வாறு பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள், ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலம், பசிபிக் கடல் தரையானது, நிலையாக இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
ஆனால் டூசோ வில்சன் மற்றும் ஹாரி ஹெஸ் ஆகியோரின் விளக்கங்களை அப்படியே ஏற்றுக் கொண்ட புவியியல் வல்லுனர்கள், பசிபிக் பாடல் பகுதியில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இறுதியாக அந்தக் கடல் தளமானது, பசிபிக் கடலைச் சுற்றி இருக்கும் கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு அடியில் உரசிய படி நகர்ந்து செல்வதாகவும்.அதனால் பசிபிக் கடலைச் சுற்றி அமைந்து இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று பசிபிக் கடல் தளமானது, நகர்ந்து பசிபிக் கடலைச் சுற்றி இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்கு அடியிலும், தீவுகளுக்கு அடியிலும், உரசிய படி செல்வதால், அப்பகுதிகளில் அடிக்கடி சுனாமிகள் உருவாகுவதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அத்துடன் பசிபிக் கடலைச் சுற்றி இருக்கும் கண்டங்கள் மற்றும் தீவுகளுக்கு அடியில் செல்லும், பசிபிக் கடல் தளமானது, பூமிக்கு அடியில் செல்லும் பகுதியில்,டிரென்சஸ் என்று அழைக்கப் படும் அகழிகள் போன்ற நீண்டு குறுகிய பள்ளங்களை ஏற்படுத்துவதாகவும் நம்புகின்றனர்.
அத்துடன் பூமிக்கு அடியில் செல்லும், பசிபிக் கடல் தளமானது, பூமிக்கு அடியில் நிலவும் அதிகமான வெப்ப நிலையால், உருகிப் பாறைக் குழம்பாகி, மேல் நோக்கி உயந்து, பசிபிக் கடலைச் சுற்றி இருக்கும் கண்டங்களின் ஓரப் பகுதிகளைத் துளைத்த படி, கண்டங்களுக்கு மேலாக எரிமலைகளாக உருவாகி இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த விளக்கங்கள் யாவும் தவறான விளக்கங்கள் என்பது ஆதரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பசிபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் ‘கிழக்கு பசிபிக் கடலடி மேடு’ என்று அழைக்கப் படும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் இருக்கிறது.
அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் ,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்த பிறகு, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி, வட மேற்கு மற்றும் தென் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.



இதில் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும், பசிபிக் கடல் தளமானது,இறுதியில் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்கு அடியில் சென்று, பூமிக்குள் இருக்கும் வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி, மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து புவித் தரையைப் பொத்துக் கொண்டு, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் தீவுகளில் எரிமலைகளாக உருவாகி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில் உருவாகி தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது, இறுதியில் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று, பாறைக் குழம்பாகி, மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, தென் அமெரிக்கக் கண்டத்தைப் பொத்துக் கொண்டு, தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள, ஆண்டிஸ் எரிமலைத் தொடராக உருவாகி இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதிக்கு இணையாகக் கடல் தரையில், ஆறாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ‘பெரு சிலி அகழி’ என்று அழைக்கப் படும் ஒரு  நீண்டு குறுகிய கடல் தரைப் பள்ளம் உருவாகி இருக்கிறது.



அந்தக் கடல் தரைப் பள்ளமானது, கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில் உருவாகித் தென் கிழக்கு திசையை நோக்கி, அதாவது தென் அமெரிக்கக் கண்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது, பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதால் உருவானது, என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அத்துடன் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும் ஆண்டிஸ் எரிமலைப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் ,தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில், கடல் தளமானது உரசிய படி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதால் ஏற்படுகிறது, என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இதே போன்று பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்கு அருகில் கடல் தரையில் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதற்கும்,அப்பகுதியில் பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும், கடல் தளங்களால் உருவானது, என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்கு அடியில் கடல் தளங்களானது உரசிய படி செல்வதால்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகுவதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
இதே போன்று, ஆண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியும் புதிய கடல் தளம் உருவாகி, வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி புதிய கடல் தளம் உருவாகி அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கி தெற்கு திசையை நோக்கியும்,அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தை விட்டு விலகி வடக்கு திசையை நோக்கியும் புதிய கடல் தளம் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.



ஆனால் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி உள்ள கடல் தரையில், பிலிப்பைன்ஸ் ,ஜப்பான் மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகில் உள்ள கடல் தரையில் இருப்பதைப் போன்று, நீண்டு குறுகிய கடல் தரைப் பள்ளங்களும் உருவாகி இருக்க வில்லை.
அதே போன்று பிலிப்பைன்ஸ் ,ஜப்பான் மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படுவதைப் போன்று எரிமலைகளும், அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியும் உருவாகி இருக்க வில்லை.
எனவே அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி, அண்டார்க்டிக் கண்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது, இறுதியாக என்ன ஆகிறது? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் எந்த ஒரு புவியியல் வல்லுனரும் விளக்கம் கூற முன்வர வில்லை.
குறிப்பாக ஒரு கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் சரியான விளக்கம் அல்ல.
எப்படியென்றால்,ஒரு கண்டத்தைச் சுற்றி இருக்கும், அதிக சுற்று வட்டப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி, அந்தக் கண்டத்தை நோக்கி, அதாவது குறைந்த சுற்றுவட்டப் பகுதியை நோக்கிக் கடல் தளம் நகர்ந்து சென்றால்,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் நெருக்கடி ஏற்பட்டு நொறுங்கி விடும்.
ஏனென்றால் கடல் தளப் பாறைகளானது, உறுதியான நொறுங்கக் கூடிய பாறையால் ஆனது.எனவே உடைந்து நொறுங்கும் நிலையில்,கடல் தளமானது தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டு இருக்க சாத்தியம் இல்லை.
இதே போன்று ஒரு கண்டத்தைச் சுற்றிலும் குறைந்த சுற்று வட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தளத்தால்,அந்தக் கண்டத்தை விட்டு விலகி, அதிக சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்ல இயலாது.
ஏனென்றால் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தளப் பாறையால், அதிக சுற்று வட்டப் பகுதியை நிரப்பவும் இயலாது.
இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையில் ஒரு கண்டத்தைச் சுற்றிலும் கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து சென்றால் அதாவது அந்தக் கண்டத்தை நோக்கியும், அந்தக் கண்டத்தை விட்டு விலகியும் கடல் தளம் நகர்ந்து சென்றால் எந்தத் திசையை நோக்கி அந்தக் கண்டம் நகர்ந்து செல்ல இயலும்?என்ற கேள்வியும் எழுகிறது.
நிச்சயம் ஒரு கண்டத்தால் ஒரே நேரத்தில் எல்லா திசைகளையும் நோக்கி நகர்ந்து செல்லச் சாத்தியம் இல்லை.
  
இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி, ஆப்பிரிக்கக் கண்டத்தை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க நாட்டின், துலன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, புவியியல் பேராசிரியர் ஸ்டீபன் ஏ நெல்சன், ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும், கடலடி எரிமலைத் தொடர் இருப்பதால், அந்தக் கண்டமானது நிலையாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் அண்டார்க்டிக் கண்டத்தைப் போலவே,ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றி உள்ள கடல் தரையில், அகழிகள் என்று அழைக்கப் படும்,நீண்டு குறுகிய பள்ளங்களும் உருவாகி இருக்க வில்லை,அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும், தொடர்ச்சியாக எரிமலைகளும் உருவாகி இருக்க வில்லை.
எனவே கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,இறுதியாக அந்தக் கடல் தளங்களானது மறுபடியும் பூமிக்குள் சென்று அழிந்து பாறைக் குழம்பாகி, மேல் நோக்கி உயர்ந்து எரிமலைத் தொடராக உருவாகுவதாகவும் கூறப் படும் விளக்கங்கள் யாவும் தவறு.
மேலும் அவ்வாறு பூமிக்குள் கடல் தளம் உரசிய படி நகர்ந்து செல்வதால்தான், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகுவதாகவும், புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும், அடிப்படை ஆதாரமற்ற கற்பனை.
ஆனால், பசிபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் குறிப்பாகத் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் உள்ள கிழக்கு கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிதாகக் கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.
அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்திற்கு வட பகுதியிலும், புதிய கடல் தளம் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,இறுதியில் அந்தக் கடல் தளமானது நியூசிலாந்து தீவுக்குக் கிழக்குப் பகுதியில், பூமிக்குள் உரசியபடி செல்வதாகவும், அதனால்தான் நியூசிலாந்து தீவுக்குக் கிழக்குப் பகுதியில் டோங்கா கடல் தரைப் பள்ளம் உருவாகி இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
அத்துடன் அந்தக் கடல் தரைப் பள்ளப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், அந்தப் பகுதியில் கடல் தளமானது பூமிக்குள் உரசிய படி சென்று கொண்டு இருப்பதே காரணம் என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
புவியியல் வல்லுனர்கள் விளக்கம் நம்புவதைப் போன்று உணமையில் கிழக்குப் பசிபிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி, வட மேற்கு திசையை நோக்கி அதாவது டோங்கா தீவை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,அதை ஒட்டிய படி அண்டார்க்டிக் கண்டத்திற்கு வட பகுதியிலும், புதிய கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி,அதாவது பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளை நோக்கி கடல் தளம் நகர்ந்து கொண்டு இருந்தால், அண்டார்க்டிக் கண்டத்திற்கு வட பகுதியில் இருந்து, டோங்கா தீவு வரை,தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பட வேண்டும்.



ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், அவ்வாறு அண்டார்க்டிக் கண்டத்தின் வட பகுதியில் இருந்து டோங்கா தீவுப் பகுதி வரை, தொடர்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
எனவே அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதன் மூலம் கடல் தளமானது நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றியும்,அதே போன்று கிழக்கு பசிபிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை
ஜப்பான் சுனாமிக்கு ஏன் ஆதாரங்களை வெளியிட வில்லை?
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினோராம் நாள், ஜப்பானின் ஹோண்சு தீவிற்கு கிழக்குப் பகுதியில், பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர நில அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக சுனாமி உருவானது.
அந்த நில அதிர்ச்சியின் பொழுதும், அதற்கு பிறகு ஏற்பட்ட பல தொடர் நில அதிர்ச்சிகளின் பொழுதும், ஜப்பானில் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது.
ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு ,பசிபிக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி கடல் தளமானது நகர்ந்து ஹோண்சு தீவுக்கு அடியில் உரசியபடி சென்றதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதிலும் குறிப்பாக பசிபிக் கடல் தளமானது நீண்ட காலமாகவே ஹோண்சு தீவுப் பகுதியில் நகராமல் முட்டிக் கொண்டு இருந்ததாகவும், அதனால் அழுத்தம் அதிகரித்ததால், திடீரென்று பசிபிக் கடல் தளமானது ஹோண்சு தீவுக்கு அடியில் உரசியபடி நழுவிச் சென்றதால் நில அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், அப்பொழுது கடல் தரைக்கு மேல் இருந்து கடல் நீரும் திடீரென்று மேல் நோக்கி தள்ளப் பட்டதால், சுனாமி உருவானதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு பசிபிக் கடல் தளமானது, திடீரென்று ஹோண்சு தீவுக்கு அடியில் நழுவிச் சென்றதால்,நீண்ட காலமாக அழுத்தத்தில் இருந்த, ஹோண்சு தீவின் கடற்கரைப் பகுதியானது,பசிபிக் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து இருப்பதும் செயற்கைக் கோள் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து உள்ளனர்.  
குறிப்பாக அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கென்னத் ஹட் நட் என்ற புவியியல் வல்லுநர், ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதியில் நிறுவப் பட்டு இருந்த, ஒரு செயற்கைக் கோள் நிலையமானது,  எட்டு அடி, கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இருந்ததாகவும், அதன் அடிப்படையில் ஹோண்சு தீவே, கிழக்கு திசை நோக்கி எட்டு அடி நகர்ந்து விட்டது, என்று அறிக்கை வெளியிட்டார்.
குறிப்பாக ஜப்பானில் எண்ணூறு நில அதிர்ச்சி ஆய்வு மையங்கள் உள்ளன.அத்துடன் ஆயிரத்தி இருநூறு செயற்கைக் கோள் தொடர்பு நிலையங்களும் நிறுவப் பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் டாக்டர் கென்னத் ஹட் நட், ஹோண்சு தீவின் வட மேற்கு பகுதியில் இருந்த, ஒரே ஒரு செயற்கைக் கோள் தொடர்பு நிலையம் மட்டும் எட்டு அடி நகர்ந்து இருந்ததாகக் கூறி, ஹோண்சு தீவே எட்டு அடி நகர்ந்து விட்டதாக விளக்கம் தெரிவித்து இருந்தார்.
உடனே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரெய்னர் கைன்ட் என்ற நிலநடுக்கவியல் வல்லுநர், ஜப்பான் தீவில் உள்ள மற்ற செயற்கைக் கோள் நிலையங்கள் பற்றிய விபரங்கள் பற்றி எதுவும் தெரிவிக்காமல், ஒரே ஒரு நிலையம் மட்டும் எட்டு அடி நகர்ந்து இருப்பதன் அடிப்படையில், எப்படி ஹோண்சு தீவே எட்டு அடி நகர்ந்து விட்டது என்று கருத முடியும்? என்று விளக்கம் கேட்டார்.
அத்துடன் டாக்டர் ரெய்னர் கைன்ட் அவர்கள், டாக்டர் கென்னத் ஹட் நட்டின் விளக்கம்,ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதிக்கு மட்டும் பொருந்தும், என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் இன்று வரை ஹோண்சு தீவின், மற்ற செயற்கைக் கோள் தொடர்பு நிலையங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.
இந்த நிலையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, ரோன்ஜியாங் வாங் மற்றும் தாமஸ் வால்டர் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள், ஜப்பானில் உள்ள ஐநூறு செயற்கைக் கோள் நிலையங்கள் குறித்த தகவல்களை ஆய்வு செய்ததின் அடிப்படையில், ஜப்பான் தீவின் கிழக்குக் கடற் கரைப் பகுதியானது, கிழக்கு திசையில் ஐந்து அடி நகர்ந்து விட்டது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இதே போன்று ஸ்டீபன் ஸ்டோபோலவ் என்ற புவியியல் வல்லுநர்  தலைமையிலான குழுவினர், கணிப் பொறி உதவியுடன் ஆய்வு செய்து, ஜப்பான் எண்பத்தி எட்டு அடி வரை நகர்ந்து விட்டது, என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
முக்கியமாக ஜப்பானில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு நானூற்றுக்கும் அதிகமான முறை கடும் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.எனவே செயற்கைக் கோள் நிலையங்களின் வேறுபட்ட வீதத்திலான இடப் பெயர்ச்சிக்கு நிலச் சரிவே காரணம் என்பதே ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம்.
ஒரு நல்ல செய்தி
இனிமேல் நில அதிர்ச்சி வருமா? வராதா ?என்று வானிலை ஆய்வு மையத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வானத்தைப் பார்த்து மழை வருமா! வராதா?  என்றுதான் அறிவிப்பார்கள்.

ஆனால் முதன் முதலாக வானத்தைப் பார்த்து நில அதிர்ச்சி ஏற்படப் போவதை, ஒரு வாரத்திற்கு முன்பே சரியாகக் கணித்துக் கூறி,  ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள்.

பன்நெடுங்  காலமாகவே பெரிய நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்பு அசாதாரண வானிலை நிலவி இருப்பது அறியப் பட்டுள்ளது.

 குறிப்பாகக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பொழுது கூட, ஹோண்சு தீவில் நில அதிர்ச்சி மையத்திற்கு மேலே வளி மண்டல மேலடுக்கில் அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்து இருந்தது.ஆனால் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.

ஆனால் வளி மண்டலத்தில் ஏற்பட்ட இந்த அசாதாரண வெப்ப நிலை உயர்வானது , நில அதிர்சிக்குப் பிறகு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்தான்  தெரிய வந்தது.


இவ்வாறு நில அதிர்ச்சிக்கு முன்பு வளி மண்டல மேலடுக்கில் வெப்ப நிலை உயர்ந்ததற்கு, நாசாவைச் சேர்ந்த டிமிட்டார் ஒவ்சொனவ் ''அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வெளிப் பட்ட கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக இருக்கலாம், என்று தெரிவித்து இருந்தார்.

ரேடான் வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப் படும் மணமற்ற, நிறமற்ற, கதிரியக்கத் தன்மையுடைய வாயு ஆகும்.

இந்த வாயுவின் கதிரியக்கத்தால் காற்றில் உள்ள மூலக் கூறுகளில் உள்ள எலெக்ட்ரான்கள் தனியாகப் பிரிக்கப் படுகின்றன.இதனால் காற்றில் மின் சுமை உடைய அயனிகள் உருவாகின்றன.

இந்த அயனிகளானது நீரை ஈர்க்கும் தன்மை உடையது.அவ்வாறு நீரை ஈர்க்கும் வினை நடைபெறும் பொழுது வெப்பம் உமிழப் படுகிறது.இதனால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம் என்று டிமிட்டார் ஒவ்சொனவ் விளக்கி  இருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் ஜப்பானின் அவாஜி தீவில் ,17 இடங்களில் வளி மண்டலத்தில், சாதாரணமாக ஒரு கண சதுர சென்டி மீட்டர் பகுதியில் ஆயிரம் அயனிகள் இருப்பதற்கு பதிலாக பனிரெண்டாயிரம் எண்ணிக்கை என்ற அளவில், உயர்ந்து இருப்பது வானிலை ஆய்வு செயற்கைக் கோள் மூலம் தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் ஒரு தனியார் தொண்டு நிறுவன ஆராய்ச்சியாளர்கள், அவாஜி தீவில் ரிக்டர் அலகில் 5 அளவிலான நில அதிர்ச்சி ஏற்படும் என்று முன்கூட்டியே அறிவித்தனர். 

அந்த அறிவிப்பு வெளியிட்ட பிறகு ஏப்ரல் பதின்மூன்றாம் நாள், ரிக்டர் அலகில் 6.3 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.

அப்பொழுது இருபத்தி நான்கு பேர் காயம் அடைந்ததைத் தவிர உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயுக் கசிவு ஏற்படுவதற்கு இது வரை யாரும் சரியான விளக்கத்தைக் கூற வில்லை,எரிமலைகளில் இருந்து வெளிவரும் ரேடான் வாயு,நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களில் இருந்து வெளிப் பட்டு இருப்பதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதை உறுதிப் படுத்துகிறது.

ஏன் சுனாமியை முன்கூட்டியே அறிய முடிய வில்லை ?


உலகில் இருபத்தி மூன்று சதவீத மக்கள் கடற் கரையோரத்தில் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் புவியியலாளர்களால் சுனாமியை முன் கூட்டியே அறிய முடியாமல் இருப்பதற்கு,நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்த அவர்களின் தவறான புரிதலே காரணம்.


எரிமலை வெடிப்பை முன் கூட்டியே அறிவதன் மூலம், நில அதிர்ச்சி மற்றும் சுனாமியை முன் கூட்டியே அறியலாம்.

எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.எனவே எரிமலைகளின் இயக்கத்தை அறிவதன் மூலம் ,நில அதிர்ச்சியையும் சுனாமியையும் முன் கூட்டியே அறிய இயலும்.

உதாரணமாக ,வட அமெரிக்கக் கண்டத்தில்,ஓரிகன் நகரக் கடற்பகுதியில் 1981ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் எம்பிளே என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஓரிகன் நகரக் கடற்கரையில் இருந்து, 300 மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஒரு இடத்தில், நீரில் அதிக அளவில் கனிமங்கள் கரைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அப்பொழுது அங்கு எரிமலைகள் எதுவும் காணப்பட வில்லை.

ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1989ஆம் ஆண்டு அதே இடத்தில், பத்து மைல் தூரத்திற்குப் பத்து சிறிய எரிமலைகள் புதிதாக உருவாகியிருப்பதை அந்த ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தார்கள்.

எனவே கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பகுதியில் கடல் நீரில் கனிமங்களின் அளவை அறியும் கருவிகளைப் பொருத்துவதன் மூலம் கடலடி எரிமலைகளின் இயக்கத்தை அறிய இயலும்.அதன் அடிப்படையில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படப் போவதையும் அறிய இயலும்.

குறிப்பாக ஒரு எரிமலை வெடிப்பதற்கு முன்பு அதிலிருந்து கந்தக வாயு உள்பட பல வாயுக்கள் வெளிவருகின்றன.உதாரணமாக பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள பினாடுபோ எரிமலையில் இருந்து 13.05.1991 அன்று,அதிக அளவு கந்தக வாயுக்கள் வெளிவந்தது.அதன் பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு ,12.06.1991 அன்று,அந்த எரிமலை வெடித்துச் சீறியது.

இதே போன்று கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.

ஆனால் தற்பொழுது கடல் தளம் நகர்ந்து கண்டங்களுக்கு அடியிலும் தீவுகளுக்கு அடியிலும் செல்வதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகப் புவியியலாளர்கள் தவறாக நம்புகின்றனர்.

எனவே அதன் அடிப்படையிலேயே சுனாமியை அறியும் முறையும்  மேற்கொள்ளப் படுகிறது.
குறிப்பாகக் கடலுக்கு அடியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு, நில அதிர்ச்சியால் கடல் நீரானது மேல் நோக்கி உந்தப்படும் பொழுது, ஏற்படும் கடல் மட்ட உயர்வால், உருவாகும் அழுத்த அதிகரிப்பு, கடல் தரையில் பொருத்தப் பட்டு இருக்கும் கருவிகள் மூலம் (pressure sensor) அறியப் படுகிறது.

அதன் பிறகு அந்தத் தகவல்கள்  சமிங்ஞைகள் (Signal) மூலம்,கடல் மட்டத்தில் மிதந்து கொண்டு இருக்கும் மிதவைக் கருவிக்கு (tsunami buoy )அனுப்பப் படுகிறது.

அதன் பிறகு அந்தத் தகவல்களானது செயற்கைக் கோளுக்கு அனுப்பப் படுகிறது.

அதன் பிறகு அந்தத் தகவல்கள் சுனாமி ஆய்வு மையத்திற்கு அனுப்பப் படுகிறது.சுனாமி ஆய்வு மையத்தில் இருக்கும் நிபுணர்கள் அந்தத் தகவல்களை ஆய்வு செய்து சுனாமி வருமா? வராதா? என்று முடிவெடுத்து அறிவிக்கின்றனர்.

இந்த முறையில்  நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகே, தகவல்கள் பெறப் பட்டு, ஆய்வு மேற்கொள்ளப் படுவதால், சுனாமி வருவதற்குப் பத்து முதல் இருபது நிமிடங்களுக்கு முன்பே, சுனாமி எச்சரிக்கை செய்ய முடிகிறது.

ஆனால் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடிக்கப் போவதை முன் கூட்டியே அறிவதன் மூலம், நில அதிர்ச்சியையும் சுனாமியையும் பல நாட்களுக்கு முன்பே அறிய இயலும்.

அதன் அடிப்படையில் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிர் மற்றும் பொருட் சேதத்தைத் தவிர்க்கலாம்.



No comments: